கடந்த 75 ஆண்டுகளில் நிதி சேவைகள் துறையை அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தியமைக்காக இந்த துறையில் பணியாற்றி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அசாதாரணமான அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தி, கொவிட்-19 பெருந்தொற்றின் போது நிதிச் சேவைகள் துறைத் தொழிலாளர்களும் பிற துறைகளைப் போலவே முன்கள ஊழியர்களாக இருந்ததுடன் எண்ணிலடங்கா சவால்களுக்கு மத்தியிலும் இந்தத் துறையை அவர்கள் மேன்மையுடன் இயங்க வைத்தனர்.
































